Wednesday 11 January, 2012

கண்மாயில் வீசப்பட்ட, பிறந்து 10 மணி நேரமான பெண் குழந்தை

வெகு சமீபத்தில் படித்த ஒரு பத்திரிக்கை செய்தி


இளையான்குடி:தாயமங்கலம் அருகே, கண்மாயில் வீசப்பட்ட, பிறந்து 10 மணி நேரமான பெண் குழந்தை, உயிரோடு மீட்கப்பட்டு, சிவகங்கை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் அருகே கண்மாயில், கிராமத்தினர் நேற்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. மாடு மேய்த்தவர்கள் அங்கு சென்ற போது, அரை அடி தோண்டப்பட்ட பள்ளத்தில், பெண் குழந்தை கிடந்ததைக் கண்டனர்.வி.ஏ.ஓ.,க்கும், போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கமான நடைமுறைகளுக்கு பின், குழந்தை, தாயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர் ராஜேஸ்வரி கூறுகையில், ""குழந்தை பிறந்து, 10 மணி நேரம் தான் ஆகியிருக்கும்; அதன் எடை, 2.5 கிலோ உள்ளது,'' என்றார்.உடல் நலக்கண்காணிப்புக்காக, குழந்தை, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. குழந்தையை வீசிச் சென்ற பெண் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர். - தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி »தமிழ்நாடு.


நாகரீகத்திலும், படிப்பறிவிலும் மேலும் உலகம் வியக்கும் விஞ்ஞான அறிவிலும் முன்னோக்கி நடை போடுவதில் ஒரு உதாரணமாக விளங்கும் நமது தமிழ் சமுதாயத்தில் பெண்ணினத்துக்கு எதிரான அவலங்கள் ஆங்காங்கே நடந்தேறுவதை கானும் போது மேற்சொன்ன சாதனைகள் எல்லாம் அதாள பாதாளத்தில் தள்ளி நசுக்கப்பட்ட அசிங்கங்களாய் பல்லிழுப்பதை மனம் வெட்கி உணரத்தான் முடிகிறது. 

கண்மாயில் வீசப்பட்ட பெண் சிசுக்கள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் சிசுக்கள் மேலும் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட பெண் சிசு பிரேதங்கள் இது போன்ற மன்னிக்க முடியாத நிகழ்வுகளை பத்திரிக்கைகளில் பார்க்கும் பொழுது, பெண்ணினத்துக்கு எதிரான அராஜகங்கள் சில தமிழகத்து கிராமங்களில் இன்னும் களையெடுக்கப்படாமல் புறையோடியிருப்பதை உணர முடிகிறது.

பெண்ணே பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுப்பதும், பெற்றவளே பெண் குழந்தையை தூக்கி வீசுவதையும் பார்க்கும் போது பெண்ணினத்துக்கு எதிரி பெண் தானா? என எண்ணத்தோன்றுகிறது, இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் இன்றய சமுதாயத்துக்கு சாதாரண செய்தியாகி போய்விட்டது. சாதாரண விஷ்யங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற விஷயங்களுக்கு கொடுக்க முடிவதில்லை இந்த சமுதாயத்தால்!.

இந்த சமுதாயம் பெண்ணினத்தை எங்கு கொண்டு செல்கிறது என்பதை பெண்ணிமே உணர்ந்துக்கொள்ள முடியா சூழல் தான், தன் கையே தன் கண்ணை குத்திக் கொள்வது போண்ற பிரதிபலிப்புக்கள் உணருவார்களா? பெண்கள்!!!


மனிதன் ஒன்றின் தேவையை உணராதவரை அதன் முக்கியத்துவத்தை உணருவதில்லை இது பொருட்களுக்கு இடையிலான தேவை, அளிப்பு சமாச்சாரங்கள், ஆனால் ஒரு பொருளுக்கு சமமாக மனித உயிரினை கருதுவதை என்னவென்று சொல்வது, ஏன் பெரும்பாலன ஆண் வர்க்கங்கள் பெண்னினத்தை ஒரு போகப் பொருளாகத்தானே பார்க்கிறது, என்று மாறும் இந்த இழினிலை?