Sunday 30 January, 2011

வல்லமை



அந்த பிளாட்பார்ம்! சிதிலமடைந்த பென்ஞ்சுக்கள், ஒரு நாளைக்கு இரு முறை மட்டும் வந்து செல்லும் இரயில் வண்டிகள் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டும் அதன் தோற்றம் அதனை உரிமையாக கொண்ட அந்த ரயில்வே ஸ்டேஷன்!!
ஓங்கி வளர்ந்த ஒரு வேப்ப மரம் அந்த ஸ்டேஷனுக்கு வருபவர்களுக்கு இலவச ஏசியாய் தனது பணியை செவ்வனே செய்தது. 

அந்த வேப்ப மரத்தை யொட்டினாற் போல் ஒரு சிறிய பெட்டிக்கடை அது மட்டுமே அந்த ஸ்டேஷனுக்கு வருவோரின் தேவைகளையும், வரும் ரயில் பயணிகளின் தேவைகளையும் தீர்க்க ஒரே ஒரு வாய்ப்பு.

குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, தினமலர் முதலிய பத்திரிக்கைகளும், கேக், பிஸ்கட், மிட்டாய் வகைகள் மற்றும் லெமன், தயிர் சாத வகைகள் அந்த பெட்டிக்கடையின் அன்றாட வியாபார மூலதனங்கள், ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே ரயில் வரும் என்றாலும் ஒவ்வொரு முறையும் ப்தினைந்து நிமிடங்கள் நிற்க்கும் அந்த ரயில்.

கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் சதூர்யமாக வியாபாரம் செய்வதில் பெட்டிக்கடை மனியண் கில்லாடி.

காலை 11.30 க்கு ஒரு முறை மாலை 5.30 க்கு ஒரு முறை வரும் அந்த ரயில். அந்த நேரங்களில் பெட்டிக்கடை மனியண் பம்பரமாக சுழலூவான்.
கிடைக்கின்ற இரு சந்த்ர்ப்பத்திலும் குறைந்தது 500 அல்லது 600 ரூபாய் வியாபாரம் செய்துவிடும் சாமர்த்தியம் அவனுக்கு.
ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை பிச்சைக்காரன் இருளப்பன். 
நெடுநெடு உயரம், ஒடுங்கிய உடல்வாகு, பல வருடங்களாக எண்ணெய் பாராத சடை பிடித்த தலை கேசம், தாடி, உடை எனும் பெயரில் கிழிந்த கோவன துண்டு, அழுக்கு உடலுமாய் விகாரமாய் காட்சி தரும் இருளப்பன்.

இருளப்பன் தின்றதில் மிச்ச்த்தை உண்டு வாழுமொரு கருப்பு நாயும் அந்த ஸ்டெஷனையே சுற்றி வந்தது இருளப்பன் போலவே எழும்பும் தோலுமாய்.

பயணிகள் மணியண் கடைக்கு வரும் போதெல்லாம் அவர்களை அனுகி பிச்சை கேட்ப்பது இருளனின் வாடிக்கை. இதனால் சில நேரங்களில் பயணிகள் தொந்தரவுக்கு ஆளாவதும் அதனால் மனியணின் வியாபாரம் பாதிக்கப்படுவதும் வாடிக்கை.

இதனால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை வருவதும் அதனை ஸ்டேஷன் மாஸ்டர் சதாசிவம் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை.

கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாக வரும் ரயில்கள் வரவில்லை தண்டவாளத்தில் ஏதோ பிரச்சனை என்றார்கள் இதனால் மணியணின் வியபாரமும், இருளப்பனின் வ்ருமானமும் பாதிக்கப்பட்டது.

இன்று கண்டிப்பாக வண்டி வரும் என ஸ்டேஷன் மாஸ்டர் சதாசிவம் சொன்னார் அந்த நம்பிக்கையில் எப்படியாவது விட்ட இரண்டு நாள் வருமானத்தையும் சம்பாதித்து விட வேண்டும் என மணியண் தயாராக இருந்தான்.
ஸ்டேஷன் மாஸ்டருடன் மணியண் பேசுவதை கேட்ட பிச்சைக்காரனும் தன் பங்குக்கு தயரானான் மேலும் இரண்டு நாள் பட்டினி அவனை மேலும் உசுப்பியது.
அந்த கருப்பு நாயும் இரண்டு நாட்களாக சாப்பிட ஏதும் கிடைக்காததால் பிச்சைக்காரன் ஏதேனும் போட மாட்டானா யென அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்க்கெல்லாம் 11.30 க்கு வரும் ரயில் வந்தது மணியண் பரப்பரப்பானான் கடையில் கூட்டம் கூடியது.

பயணி ஒருவர் மணியண் கடையில் கேக் வாங்கினார் இதனை கண்ட பிச்சைக்காரன் ஆர்வமானான் அந்த பயணியை நோக்கி கையை நீட்டி கேக் கேட்டான் கெஞ்சலாக, 
பயணியின் பார்வையில் எரிச்சல் இருந்தது, பிச்சைக்காரனின் தோற்றமும் அவனிடமிருந்து வரும் துர்நாற்றமும் மேலும் அவரை எரிச்சல்படுத்தியது தூரப்போடா என கையை தூக்கி விரட்டினார் பிச்சைக்காரனை,
அசரவில்லை பிச்சைக்காரன், அவர் விரட்டலுக்கு பயப்படுவ்துபோல் நடித்து மீண்டும் அவரை நெருங்கினான்.

ஐயா! ரெண்டு நாளா சாப்பிடல எதாவது கொடுங்கய்யா! கையேந்தி நெருங்கினான்.

கடைக்கார மணியண் கோபமானான் பிச்சைக்காரனை திட்டினான் போடா என விரட்டினான், பிச்சைக்காரன் மணியனை முறைத்தான் ஆனால் அங்கிருந்து நகரவில்லை.

பிச்சைக்காரன் மீண்டும் பயனியை நெருங்கி ஐயா! என்றான். பயணி மீண்டும் எரிச்சலானார் போடா என பிச்சைக்காரனை நோக்கி கையை ஓங்கினார், பயந்து பின் வாங்கிய பிச்சைக்காரன், ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்துடன் அவன் காலையே சுற்றி வந்த கருப்பு நாயை மிதித்து விட்டான், மிதிப்பட்ட வலியினால் ஆக்ரோஷமாக குரைத்த நாய் பிச்சைக்காரனை நோக்கி கடிக்க பாய்ந்தது.
பதறிய பிச்சைக்காரன், அதனை அடிபபது போல் பாவனை செய்ய , நாய் தூரமாக ஓடிபோய் அவனை பார்த்து குரைத்தது. அதனை சட்டை செய்யாத பிச்சைக்காரன் மீண்டும் அதே பயணியை நெருங்கினான் அதற்க்குள் அந்த பயணி வந்த ரயில் புறப்பட தொடங்கியது பயணி அவசரமானார் கையில் கேக்குடன் ரயிலை நோக்கி நடந்தார் பிச்சைக்காரன் இடைமறித்து ஐயா! என்றான் கெஞ்சலாக,
பயணி அவசரமானார் பிச்சைக்காரனிடமிருந்து தப்பிக்க சீக்கிரம் ரயிலில் ஏறுவதே சரியென ப்பட்டது அவருக்கு. ரயிலும் நகர தொடங்கியது, பயணி ஓடிப்போய் ரயிலில் ஏறினார். ஓடும்பொழுது அவர் கையிலிருந்து ஒரு கேக் நழுவி விழுந்தது அந்த கேக்கினை எடுக்க எத்தனிததவர் அவகாசம் இல்லாததால் அதனை விட்டுவிட்டு ரயிலில் ஏறினார். அவர் பின்னாலேயே ஓடிய பிச்சைக்காரன் கீழே விழுந்த கேக்கினை க்கண்டு பரவசமானான்.

அந்த கேக்கினை பிச்சைக்காரன் எடுக்க எத்தனிப்பதை கண்ட ரயில் பயணியின் முகத்தில் ஏமாற்றம் எதிரொலித்தது.

பிச்சைக்காரன் அந்த கேக்கினை எடுப்பதற்க்கு முன் ஆக்ரோஷ குறைப்புடன் கருப்பு நாய் இடையில் புகுந்தது கடுப்பானான் பிச்சைக்காரன், நாயினை விரட்ட கையை ஓங்கினான் நாய் அசரவில்லை கேக்கினை கவ்வ பாய்ந்தது வழக்கதுக்கு மாறாக அதன் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தது, கடித்துவிடுமோ என்ற பயம் இருந்தாலும் துணிந்து கேக்கினை எடுத்தான் பிச்சைக்காரன், ஆனால் நாய் ஆவேசமாக அவனை நோக்கி பாய்ந்தது பயத்தில் பதறிய பிச்சைக்காரன் தடுமாறி கீழே விழுந்தான், அவன் கையிலிருந்த கேக்கும் காலியாக இருந்த தண்டவாளத்தில் போய் விழுந்தது.

கீழே விழுந்த பிச்சைக்காரன் சுதாரிப்பதற்க்குள் நாய் தண்டவாளத்தில் விழுந்த கேக்கினை கவ்விக்கொண்டு ஓடியது, சுதாரித்த பிச்சைக்காரன் நாயை விரட்ட எத்தனித்தான் ஆனால் நாய் அதற்க்குள் கேக்குடன் ஓடி மறைந்தது.
கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தினை தடவிக்கொண்டே பிச்சைக்காரன் சோர்வாக வேப்பமரத்தினடியில் போய் அமர்ந்தான்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த பெட்டிக்கடை மனியன் நக்கலாக சிரித்தான் பிச்சைக்காரனை ப்பார்த்து, அப்பொழுது தான் மணியனுக்கு ஞாபகம் வந்தது கேக் வாங்கிய பயணி கேக்குக்கு காசு தரவில்லை என்பது