Saturday 29 January, 2011

வளைகுடா நாடுகள்: சவுதி அரேபியா


தட்பவெப்ப நிலை வேறுபாடுகளினால் ஏற்ப்படும் பாதிப்புகள்  மழை வளங்கள் குறைவு, வெப்ப நிலை அளவுகளின் ஏற்றத் தாழ்வுகள், கால நிலை தவறி பெய்யும் மழை இதுபோன்ற காரணங்கள் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவால்களை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன எத்தனை அதிவேகத்தின் விஞ்ஞான வளர்ச்சிகள் இருந்தாலும் இயற்க்கையின் சீற்றத்துக்கு முன் அவை பின்னடந்ததாகவே உள்ளன மேலும் அவை அத்தனையும் இயற்க்கைக்கு எதிராகவே அமைந்துவிடுகின்றன.

வளைகுடா நாடுகளை பொருத்தவரை அதாவது பாலைவன நாடுகளை பொருத்தவரை, மழைவளம் மிகக்குறைவு, வெப்பம் மிகுந்த நாடுகள் என்ற பொதுவான ஒரு கண்ணோட்டம் உண்டு வருடத்திற்க்கு ஒருமுறை மழை பெய்வதே கடினம், அனல் காற்றும், மணல் புயலும் அடிக்கடி ஏற்ப்படக்கூடிய இயற்க்கை சூழலைக் கொண்ட நாடுகள் அவை, எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் செல்வம் கொழிக்கக் கூடிய நாடுகள் அதனால் அதன் தொழில் நுட்பங்கள், கட்டுமானங்கள், பொருளாதார வளர்ச்சிகள் அனைத்திலும் அபரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் அவை. பெரும்பாலனோர் வருமானத்திற்க்காக வளைகுடா நாடுகளை நோக்கி பயணிக்கும் அளவுக்கு, அயல்னாட்டு தொழிலாளர்களை பயன்படுத்தி வளர்ச்சி கண்டுவரும் நாடுகள் வளைகுடா நாடுகள்.

விண்ணைமுட்டும் கட்டிடங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள், ஆடம்பர வீடுகள்  என கட்டிடக்கலையில், அயல்னாட்டு வல்லுனர்களை பயன்படுத்தி அபரித வளர்ச்சி கண்டிருந்தாலும்  சமிப காலங்களாக இயற்க்கை சீற்றங்களினால் ஏற்ப்படும் பாதிப்புகள் வளைகுடா நாடுகளின் கட்டிடக்கலையின் பின்னடைவை உணர்த்தியுள்ளன, சமீப காலங்களில் இந்த வளைகுடா நாடுகளில் பெய்ந்து வரும் மழை, அன்னாட்டு  நகர அமைப்பிலும் கட்டிடக் கலையிலும் உள்ள பின்னடைவை மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்தது அந்நகரம், சாலைகளும், தொழிற்சாலை பகுதிகளும், வீடுகளுள்ள பகுதிகளும் வெள்ளக்காடானது, மழையினால் பெருக்கெடுத்த வெள்ள நீர் வடிய தேவையான வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தால் மழை நீர் அங்கங்கே தேங்கியது நகரம் முழுவதுமே வெள்ளக்காடானது இதனால் எண்ணற்ற விபத்துக்கள், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது, வாகனங்கள் நீரில் முழ்கின. வெள்ள நீர் ஒரு ஆள் முழ்கும் அளவுக்கு மேலாக தேங்கியிருந்தது இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, வெளியே சென்றவர்கள் திரும்ப வீடு வந்து சேர இயலானிலை. முறையற்ற கட்டிட கட்டமைப்புகளும் போதிய வடிகால் வசதியின்மையும் இதற்க்கு முக்கிய காரணங்கள், சவுதி அரேபியாவில் மழையே பெய்யாது என்ற நோக்கத்தில் நகரின் அமைப்பை உறுவக்கினார்களோ என எண்ணத் தோன்றுகிறது, இது போன்ற மற்றுமொரு அனுபவம் அந்நகரருக்கு கடந்த ஆண்டு கிடைத்தது அப்பொழுது பெய்த கடும் மழையில் நூற்றுக்கு மேலானோர் உயிரிழந்தனர் அந்த பாதிப்பிற்க்கு பின்பும் அந்நகரின் கட்டிடக் கலையிலும் நகர அமைப்பிலும் எந்தவித மாற்றமும் இல்லை அதன் விளைவே சில தினங்களுக்கு முன் பெய்த மழையிலும் கடுமையான் பாதிப்பை சந்திதுள்ளது.

வயோதிகச் சுமைகள்


உச்சி வெயில் மண்டையை பிளந்தது, நாக்கு தண்ணீர் கேட்டு தடித்தது, கால்கள் தடுமாறின பக்கத்தில் இருந்த சுவற்றை பிடித்தவாறு  சற்று ஆசுவாசப்படுத்தினார் குமரய்யா.
குமரய்யா வயது 60 தை தாண்டிய முதுமைப்பருவம், கசங்கி அழுக்கேறிய சட்டையும் வேட்டியும், வாடிய முகமும், தள்ளாடிய நடையும் ஒருவாரகாலமாக வீதியை தனது சொந்தமாக்கிக் கொண்ட நிலையியை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
தூரத்தில் தெரிந்த அந்த வேப்பமரத்தை அவரது கண்கள் ஆவலாக நோக்கின அதன் நிழல் தரும் சுகம் அவருக்கு சொர்க்கத்தை நினைவுப்படுத்தியது எப்படியாவது அந்த மரத்துகருகில் போய்விட வேண்டும் உடல் தளர்ந்து இருந்தாலும் மனசு உந்தியது.
காடுகள் எல்லாம் கான்கிரிட் காடுகளாய் உருமாறிக்கொன்டிருக்கும் இந்தக் காலத்தில் யாரோ புண்னியவான் தன் வீட்டு வாசலில் வேப்பமரத்தை வளர்த்திருந்தார், பசியாலும் தாகத்தாலும் தளர்ந்து போன உடல் அறுபது வயது முதுமை வேறு இயலாமைக்கு சொல்ல்வா வேண்டும். அந்த மரத்துக்கருகில் போகும் நோக்கத்துடன் தளர்ந்த நடையுடன் ஒரு அடிமுன் வைத்தார் முன்னெச்சரிக்கை காரணமாக சுவற்றின் மீதிருந்த பிடியை விடவில்லை முட்டிக்கால் நடுங்கியது தடுமாற்றத்துடன் அடுத்த அடியை தொடங்கினார் வீதியின் மையத்துக்கு வந்தவர் சற்று தடுமாறினார் கண்  பார்வை மங்கியது தலை சுற்றுவது போல் வந்தது தடுமாறினார், தூரத்தில் ஏதோ வாகனம் வருவது போல் சத்தம் வீதியை கடக்க எண்ணம்மிருந்தாலும் கால்கள் ஒத்துழைக்கவில்லை.
தூரத்தில் யாரோ கத்தினார்கள் யோவ்... யோவ்  பெரிசு ஓரம் போய்யா வண்டி வருது, யோவ் பெரிசு காது கேட்கல  வண்டி வருது ஓரம் போய்யா...
யாரோ கத்துவது கேட்டது குமரய்யாவுக்கு கிணற்றிலிருந்து கத்துவது போல் . .
ஆனால் உடல் ஒத்துழைக்க மறுத்தது அந்த நிலையிலும் தன் இயலாமையை நினைத்து வேதனைப்பட்டார் குமரய்யா
ஏதோ வாகனம் அருகில் வந்துவிட்ட சப்தம், சட்டென யாரோ இழுத்து செல்வது போல் தோன்றியது முற்றிலுமாக மயங்கினார் குமரய்யா.
கண்களை திறப்பதற்க்கே சிரமமாக இருந்தது எவ்வளவு நேரம் மயங்கி கிடந்தார் என தெரியவில்லை குமரய்யாவுக்கு, இதமான குளிர்ந்த காற்று உடலை தழுவியது, கண்களை திறந்தார் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோசம் சொர்க்கத்தின் அரவனைப்பில் இருந்தார் குமரய்யா அதாவது அவர் சொர்க்கம் என நினைத்த அத்த வேப்ப மர நிழலின் அவரனைப்பில் இருந்தார்.  
தன்னை வீதியிலிருந்து மரநிழலில் கொண்டுவந்து போட்ட புண்ணியவானய் அவரது கண்கள் தேடியது யாரும் அகப்படவில்லை, இன்னும் மனித நேயம் அற்று போகவில்லை கடவுளுக்கு மானசீகமாக நன்றி சொன்னார்.
ஆனால் பாசம்தான் மனிதர்களுக்கு முற்றுலுமாக மறத்துப்போய்விட்டது கண்கள் கலங்கின நினைவுகள் பின்னோக்கி சென்றது.
செந்தாமரை . . . செந்தாமரை எங்கம்மா இருக்கே குரல் கொடுத்தப்படி உள்ளே வந்தார் குமரய்யா, செந்தாமரை குமரய்யாவின் மனைவி அதிர்ந்து பேசாதவள் இருக்கு இடமே தெரியாது நல்ல பண்பானவள் அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள், கடலூர் பக்கம் குடிகாடு குமரய்யாவுக்கு சொந்தவூர், தொழில் விவசாயம், மாடு, வண்டி, சொந்த வீடு என நிதானமான வசதி இருந்தது குமரய்யாவுக்கு, இருப்பினும் மகள் திருமணத்தின் போது சொஞ்சம் நிலங்கள் கையை விட்டு போனது நல்ல மாப்பிள்ளை என சொஞ்சம் கடன் பட்டு நன்றாக திருமணத்தை செய்து முடித்தார் குமரய்யா. 
மகன்கள் இருவரும் சென்னையில் இருந்தார்கள் சின்ன மகன் இஞ்னியரிங் படித்துக் கொண்டிருந்தான், பெரியவன் கடந்தவருடம் தான் கார்மென்ட் டிசைனிங் படிப்பு முடித்துவிட்டு நல்ல சம்பளத்துக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான் வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் மாலையும் கழுத்துமாக ஒரு பெண்ணோடு வந்து நின்றான்.
அப்பா நான் இந்துவை காதலிச்சு கல்யணாம் பண்ணிக்கிட்டேன் . ..  நீங்க ஏத்துக்க மாட்டீங்கன்னு தான்  . .  மென்று முழுங்கினான்
நடந்தது நடந்து போச்சு நல்லபடியாக வாழ்கையை தொடங்கு..
மருமகளை உள்ளே கூட்டிட்டுபோ செந்தாமரை என்றார் குமரய்யா
செந்தாமரை குமரய்யாவுக்கு எதிர்த்து பேசாதவள் இந்துவை உள்ளே கூப்பிட்டாள் செந்தாமரை, வலது காலை வைச்சு உள்ளே வாம்மா.
அப்பா அதுவந்து .  . நாங்க இங்கே இருக்கமுடியாது இந்துவுக்கு இந்த கிராமத்து வீடெல்லாம் பிடிக்காது நாங்க இங்கே தங்க வரல உங்கிட்டே சொல்லிட்டு போலம்னு தான் வந்தோம் என்ற மகன் பதில் எதிர்பராமல் வாசலைநோக்கி நடந்தான்.
தடுக்க முயன்ற  குமரய்யா முகத்தில் புகையை துப்பிச்சென்றது அவர்கள் வந்த பாரீன் கார், செந்தாமைரக்கு துக்கம் தொண்டையை அடைத்தது அழுகையை தவிர அவளால் வேரெதையுமே வெளிப்படுத்த முடியவிலை.
குமரய்யா தடுமாறித்தான் போனார் பார்த்துப் பார்த்து வளர்த்த மகன் பரிதவிக்க விட்டுபோனதை எண்ணி ஊர் கூடி வேடிக்கைப்பார்த்தது, செந்தாமரை கணவனுக்கு ஏற்ப்பட்ட அவமானம் தாங்காமல் வாயடைத்து சுவரோரமாய் சாய்ந்து உட்கார்ந்தாள் கண்களி கண்ணீர் ஆறாய் ஓடியது.
செந்தாமரை  . . . செந்தாமரை எங்கேம்மா இருக்க என்றபடி உள்ளே வந்தார் குமரய்யா அவரது முகம் அவமானத்தால் கருத்துப்போயிருந்தது.
செந்தாமைரை சுவரோரமாய் சாய்ந்தப்படி உட்கார்ந்திருந்தாள் அவளுக்கு சற்று தள்ளி தானும் உட்கார்ந்தார் குமரய்யா, சரி விடு செந்தாமரை ஏதோ ஆசைப்பட்டான், கட்டிக்கிட்டான், அவன் இங்கே இல்லன்னா என்ன... நமக்கு பார்க்கனும்ன்னு தோனிச்சுன்னா போய்ப் பார்த்துட்டு வந்துடப்போறோம் என்னா நான் சொல்றது என்றபடி அவள் தோளை தொட்டார் குமரய்யா செந்தாமரையிடம் பதில் இல்லை.
பயந்துபோனார் குமரய்யா, செந்தாமரை செந்தாமரை அவள் தொளை தொட்டு உலுப்பினார், பதிலில்லை செத்து சரிந்தாள் செந்தாமரை. குமரய்யாவின் அலறல் ஊரைக் கூட்டியது ஊரார் எல்லாம் துக்கம் விசரித்தார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தினறிப்போனார் குமரய்யா.
தகவல் சொல்லியனுப்பியும் இரண்டு மகன்களும் வரவில்லை மகள் தமிழரசியும் மாப்பிள்ளையும் மட்டும் வந்தார்கள் வந்த அவர்களும் இரண்டு நாள் கூட தங்காமல் ஏதோதோ காரணம் சொல்லி கிளம்பிப்போனார்கள்.
குமரய்யாவுக்கு வாழ்க்கையே சூன்யமானது செந்தாமரை இல்லாத வாழ்க்கையை அவர் எண்ணிப்பர்க்கவே இல்லை அவள்தான் அவர் உலகம் என வாழ்ந்து வந்தவர் குமரய்யா, வாய்த்த பிள்ளைகளும் எட்டிப்பார்க்கவிலை மறுமுறை.
துக்கம் விசாரிக்க வந்த நணப்ர் ஒருவர் சொன்னார் உன் இரண்டாவது மகனை சென்னையில் பார்த்தேன் ஒரு பெண்ணோடு சுற்றிக்கொண்டிருந்தான் அவனோடு இருந்த சிலரை விசரித்தேன் அது அவனுடைய மனைவி என்றும் ஒரு வாரத்துக்கு முன்புதான் திருமணம் ஆனது என்றும் சொன்னார்.
குமரய்யாவுக்கு கேட்க முடியவில்லை நெஞ்சு அடைத்தது,  நண்பரை வழியனுப்பினார் கண்ணீர் மல்கவீடே வெறிச்சோடிக்கிடந்தது சாப்பிட, குளிக்க  எதுவுமே செய்யத் தொன்றவில்லை குமரய்யாவுக்கு பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்து இருந்தார் வாசலில் ஏதோ கார் வந்து நிற்க்கும் சப்தம் கேட்டது, யார் என பார்க்கக்கூட குமரய்யவுக்கு தோன்றவில்லை.

காரிலிருந்து பெரிய மகனும், மருமகளும் வந்திறங்கினார்கள் மகன் அவர்காலில் விழுந்து அழுதான் என்னை மன்னிச்சுடுங்க்கப்பா,, எல்லாம் என்னால் தான் என்னை மன்னிச்சுடுங்க்கப்பா கதறினான் மகன், பெத்தமனம் பித்து என்பார்கள் கலங்கினார் குமரய்யா மகனை கட்டிக்கொண்டார், கவலைப்படாதிர்கள் மாமா இனி நாங்கள் இருக்கிரோம் உங்களுக்கு துணையாக என ஆறுதல் சொன்னாள் மருமகள் குமரய்யாவுக்கு அவள் மகள் போல் தெரிந்தாள் மகள் தமிழரசியின் ஞாபகம் வந்தது.

மகனும் மருமகளும் பழகிய விதத்தை பார்க்கும்போது அவர்கள் குமரய்யாவோடு இங்கேயே தங்க்கிவிடுவர்கள் எனத் தோன்றியது  குமரய்யாவுக்கு அது மனசுக்கு நிம்மதியை தந்தது ஒரு வாரம் ஓடியது குமரய்யா சற்று இயல்பு நிலைக்கு திரும்பினார் மருமகள் சமைத்துப் போட்டாள், ஊரில் எல்லோரும் குமரய்யாவுக்கு இனி பிரச்சனை இல்லை என பேசிக்கொண்டர்கள் கவனித்துக்கொள்ள மகன் இருக்கிறான் என ஆறுதல் சொன்னார்கள்.

குமரய்யா சாப்பிட்டு முடித்து விட்டு கயிற்றுக்கட்டிலில் உடலை கிடத்தினார், மகன் அருகில் வந்தமர்ந்தான், எழ முயன்றவரை கையமர்த்தினான் பரவாயில்லை படுங்கப்பா நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான் தடுமாற்றமாக

என்னய்யா சொல்லு என்றார் குமரய்யா பதட்டமாக, நானும் இந்துவும் இன்னும் எவ்வளவு நாளைக்கு உங்களோடு இங்க இருக்க முடியும்னு தெரியலைப்பா, ரெண்டுபேருமே ஆபிசுக்கு லீவ் போட்டு விட்டுத்தான் இங்கே வந்து தங்கியிருக்கிறோம் அதனால நீங்க எங்களோடு சென்னைக்கு வந்து தங்க சம்மதிச்சின்னீங்கன்னா... இழுத்தான்.

நான் எப்படிப்பா அங்கே வந்து தங்க முடியும் இங்கே நிலம் வீடெல்லாம் கிடக்கே அதெல்லாம் பராமரிக்கனுமே, அப்புறம் தமிழுக்கு தாய்வீடு இந்த வீடு தானாப்பா அவளும் வந்து போக ஒரு வீடு வேனுமே,

என்னப்பா இப்படி பேசறீங்க தமிழரசி என் தங்கச்சி இல்லையா, என் வீடு அவளுக்கு தாய் வீடு மாதிரித் தானேப்பா அவளும் சென்னையில தானே இருக்கா அவளுக்கு எப்ப் வருனும்னு தோனுதோ அப்ப நம்ம விட்டுக்கு வந்தா போச்சு, நீங்களும் எங்களோட சென்னைக்கு வந்தீட்டீங்கனா தமிழையும் அடிக்கடி உங்களுக்கு தேவைப்படும் போது போய் பார்த்துவரலாம். நீங்களும் இங்கே தனியா இருந்து அவஸ்த்தை பட வேண்டியதில்லை எங்களுக்கும் நீங்க எங்க கூட இருக்கிற நிம்மதி. என முடித்தான் மகன்.

அதுசரிப்பா இந்த வீடு, நிலத்தையெல்லாம் யார் பராமரிகிறது ஆளா வைக்கமுடியும்? என்றார் குமரய்யா.

மருமகள் பாலுடன் வந்தாள் பால் குடிங்க மாமா என்றாள் அனுசரனையாக, மாமா நான் ஒன்னு சொல்லலாமா? இழுத்தாள் மருமகள்

சொல்லுமா  . . நீ என்ன சொல்லனும் என்றார் குமரய்யா

நீங்க தனியா இருந்து கஷ்டப்படக்கூடாது என்பது தான் எங்க விருப்பம் அதுக்கு இந்த வீடும் நிலமும் தடையாக இருக்கும்னு நீங்க நெனைச்சீங்க்கன்னா, உங்களுக்கு விருப்பப்பட்டா இந்த வீட்டையும் நிலத்தையும் வித்துடலாம், அதோட சென்னையில நாங்க இருக்கும் வீடு வாடகை வீடுதான் வீடும் சின்னது, நாளைக்கு குழந்தை குட்டிங்கன்னு ஆச்சுன்னா வேறு வீடு பார்க்க வேண்டிவரும் அதனால இங்குள்ள வீட்டையும், நிலத்தையும் விற்று சென்னையில ஒரு நல்ல வீடு சொந்தமாக விலைக்கு வாங்கலாம். என முடித்தாள் மருமகள்.
அது எப்படிம்மா, இந்த வீட்டோட நிலம் எல்லாம் என் மூன்று பிள்ளைகளுக்கும் சொந்தம் உண்டு அதை எப்படிம்மா ஒரு பிள்ளைக்கே கொடுக்க முடியும் மத்த மகனுக்கும் மகளுக்கும் நான் என்ன பதில் சொல்றது அது பாவம்மா . .! என ஆட்சோபித்தார் குமரய்யா

ஐயோ ! மாமா நான் அப்படி சொல்லவில்லை அவங்க ரெண்டுபேருக்கும் சேரவேண்டியதை நாங்க கொடுத்துடுறோம், நாங்க ரெண்டு பேருமே சம்பாதிக்கிறோம் இல்லியா அதை வச்சு கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சிடுறோம் நீங்க சம்மதிச்சீங்கன்னா . . . .போதும் இழுத்தாள் மருமகள்.

மேற்க்கொண்டு பேச முயன்றவரை மகனும் மருமகளும் பேச விடவில்லை, ஒருவழியாக அவர்கள் எண்ணத்திற்க்கு தலையாட்ட வைத்தார்கள் குமரய்யாவுக்கு வேறு வழி தெரியவில்லை.

நடக்கப்போகும் விளைவின் விபரீதங்கள் புரியாமல், அவர்களின் நடிப்புப் பேச்சுக்களுக்கு ஏமாந்து போனார் ஏழை விவசாயி குமரய்யா.

மற்ற பிள்ளைகளுக்கு சொல்லாமலே வீடு விற்க்கப்பட்டது நிலமும் தான், விற்றபணம் கையில் வந்தவுடன் சென்னைக்கு கிளம்பினார்கள் மகனும் மருமகளும், சென்னைக்கு போய் வீடு வாங்கி பின் குமரய்யாவை கூட்டி போவதாக  பேச்சு அதுவரை வீடு வாங்கியவரிடம் ஒரு வாரம் அனுமதி கேட்டு குமரய்யா அதே வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

ஒருவாரம் ஓடியது, மகனிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை, போன் மூலமாக முயற்சி செய்தார், போன் அவுட் ஆப் ஆர்டர் என பதில் வந்தது, வீடு வாங்கியவர் வந்து தரக்குறைவாக பேசிவிட்டு கடைசியாக ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு போனார். மருமகளை தொடர்புக்கொண்டார், போன் ரிங்க் ஆனது ஆனால் பதிலில்லை மறுமுறை முயன்றார் போன் ஆப் ஆகி இருந்தது.

பரிதவித்து போனார் குமரய்யா, நாளை வீட்டை காலிச் செய்யாவிட்டால் அசிங்க்கமாகிப்போகுமே அவமானமாகிப்போனது அவருக்கு, பலமுறை மகனுக்கும் மருமகளுக்கும் போனில் முயன்று பலனில்லை, முடிவாக சென்னைக்கு பஸ் ஏறினார் வீட்டை பூட்டி சாவியை எதிர் வீட்டில் ஒப்படைத்து வீட்டுக்காரரிடம் கொடுக்கும்படி சொன்னார்.


சென்னை அவருக்கு புதிது அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாவம் அந்த வயதான விவசாயி தடுமாறித்தான் போனார், மகன் கொடுத்த முகவரியில் தேடினார் அது புதிதாக முளைத்துள்ள ஒரு நகர் பகுதி அங்கு மகன் மருமகள் பெயரில் யாருமே இல்லை, மருமகள் வேலை செய்வதாக சொன்ன கம்பெனியில் போய்த் தேடினார் அங்கு அப்படி யாரும் இல்லை என வெளியே விரட்டினார்கள் தேடித் தேடித் களைத்து போனார் தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பது புரிந்தது தன் விதியை எண்ணி புலம்பினார் செந்தாமரை என் நிலமையை பார்த்தியா பெத்த பிள்ளையே என்னை ஏமாத்திடுச்சி செந்த்தாமரை, கண்ணீர்விட்டு வாய்விட்டு அரற்றினார். போக வருபவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்.

கையில் காசு இல்லை பசி மயக்கம்   கால்கள் தடுமாறின மயங்கி விழப்போனவரை யாரோ ஒருவர் கொண்டுவந்து வேப்பமர நிழலில் அமரவைத்துவிட்டு போனார். வேப்பமரக் காத்து உடலை தழுவியது இதமாக, பசி வயிற்றை கிள்ளினாலும் இயலாமையினால் எழுந்திருக்க முடியவில்லை அப்படியே படுத்துகிடந்தார் குமரய்யா.

அய்யா, அய்யா! பெரியவரேயாரோ கூப்பிடுவது கேட்டது, கண்களை திறந்துப் பார்த்தார், அங்கே அவரின் வயது ஒத்த மனிதர் தலையில் தொப்பியுடனும் தாடியுடனும் நின்றிருந்தார், எழுந்திருக்க முயன்ற குமரைய்யாவை அவர் கையமர்த்தினார் பொருங்க பெரியவரே, நான் தான் உங்களை வீதியிலிருந்து இங்கு கொன்டுவந்து அமரவைத்தேன் இந்தாங்க இதை குடிங்க என கையில் ஒரு ஜூஸ் பாட்டிலை கொடுத்தார் வாங்க மறுத்த குமரய்யாவை கட்டாயப்படுத்தி குடிக்கச் சொன்னார்.
மனசு மருத்தாலும் பசி அதனை வென்றது வாங்கி குடித்தார், குமரய்யா குடித்த வேகத்தைப் பார்த்த அந்த பெரியவர் புன்னகைத்தார் எத்தனை நாள் பட்டினியோ என எண்ணத்தோன்றியது அந்த பெரியவருக்கு, குடித்து முடித்து நன்றியுடன் பார்த்தார் குமரய்யா, கண்களில் நீர் ததும்பியது ரொம்ப நன்றி ஐயா என்றார் நா தலுதலுக்க

பரவாயில்லை பெரியவரே! உங்களுக்கு எந்த ஊரு, சென்னைக்கு புதுசா, யாரைப் பார்க்க வந்தீங்க என்றார் எந்த பெரியவர்.

பேசத் தடுமாறினார் குமரய்யா என் புள்ளைங்கல தேடிவந்தேன் ஐயா என கண்ணீர் மல்க சொன்னார் குமரய்யா,
என்ன சொல்றீங்க பெரியவரே சின்னப் பிள்ளைங்களா, காணாம போய்ட்டாங்களா என பதற்றத்துடன் கேட்டார் அந்தப் பெரியவர்

இல்லைங்கய்யா வளர்ந்து கல்யாணமான பெரிய பிள்ளைங்க என்றார் குமரய்யா கண்களில் கண்ணீருடன், நீங்க சொல்றது புரியல பெரியவரே என கேள்விக்குறியுடன் பார்த்தார் அவர் குமரய்யாவை.

தன் சொந்த மகனிடமே தான் ஏமாந்த கதையினை சொன்னார் குமரய்யா, அந்தப் பெரியவர் குமரய்யாவை ஆழமாக ஒரு பார்வைப்பார்த்தார், நீங்கள் சொல்வது உண்மையா பெரியவரே என்றார் குமரய்யாவைப் பார்த்து.

ஆமாய்யா சொந்தப் பிள்ளங்க்களாலேயே ஏமாத்தப்பட்டு இன்னிக்கு நடுத்தெருவுல அனாதையா கிடககிறேன் ஐயா அனாதையா கிடக்கிறேன் என வாய்விட்டு புலம்பி அழுதார் குமரய்யா.

காதர் பாய்க்கு எல்லாம் புரிந்தது தன் சொந்தப் பிள்ளைகளால் ஏமாற்றப்பட்ட  ஒரு ஏழை விவசாயி இந்த குமரய்யா, சரி பெரியவரே வாங்க போகலாம் எழுந்திருங்க என்றார் காதர் பாய்,

நீங்க யாரு? என்னை எங்கே கூப்பிடுறிங்க முன்பின் தெரியாத எனக்கு உதவி செய்ஞ்சுறிக்கீங்க அதுக்கு ரொம்ப நன்றி, நீங்க்க தப்பா நினைக்கலைன்னா  நீங்க யாருன்னு நான் தெரிஞ்ச்சுக்கலாமா? எனக் கேட்டார் குமரய்யா. காதர் பாய் கொடுத்த ஜூஸ் குடித்த தெம்பில் சற்று தெளிவாக பேசினார் குமரய்யா.

காதர் பாய் குமரய்யாவை புன்னகையுடன் பார்த்தார், பெரியவரே! என் பேரு காதர், என்னை தெரிஞ்ச்சவங்க செல்லம்மா என்னை பாய்ன்னு கூப்பிடுவாங்க அதனால எல்லோருக்கும் என் பெயர் காதர் பாய்ன்னு  ஆகிப்போச்சு, நானும் உங்களை போலதான், ஒரு நாள் தெருவில தூக்கி எறியப்பட்டேன் அனாதையா, பல லட்சக்கணக்கில் சொத்து சேர்த்த நான் கையில் ஒரு பைசா இல்லாம ஒரு பிச்சைக்காரன் போல தெருவில் தூக்கி எறியப்பட்டேன், ஆனா நான் சோர்ந்து போய்விடவில்லை என்னை எந்த சொந்தங்க்ள் தூக்கி எறிஞ்ச்சாங்களோ அவங்களை விட அதிகாமாக சொந்தங்களை சேர்த்துக்கிட்டேன் வாங்க மத்த விஷயங்களை போய்க்கிட்டே பேசுவோம் என்ற காதர் பாய் அந்த பக்கம் வந்த ஒரு ஆட்டோவை கைக் காட்டி நிறுத்தினார்.

குமரய்யாவை கைத்தாங்க்கலாக ஆட்டோவில் ஏற்றினார் காதர்பாய், பெரியவரே இந்த சென்னையில மூர் மார்க்கெட்ல நான் ஒருபெரிய வியபாரி, எனக்கு மூனு ஆண் பிள்ளைங்க, ரெண்டு பெண் பிள்ளைங்க பெண் பிள்ளங்களுக்கு நல்ல வசதியான இடத்துல கட்டிக் கொடுத்தேன், பசங்களை நல்லா படிக்க வைத்து பெரிய ஆளாக்குனேன். இன்னிக்கு அவங்கல்லாம் பலபேருக்கு வேலைத் தரும் அளவுக்கு பெரிய ஆளாக வளர்ந்து நிக்கிறாங்க, ஆனா நான் மட்டும் அவங்களுக்கு வேண்டாதவனா போய்ட்டேன், ஒருமுறை வியாபரத்துல ஒரு பெரிய தொகை முதலீடு செய்தேன் அது எதிப்பாராத விதமாக நஷ்டத்துல போய்டுச்சு, அந்த அதிர்ச்சியில நான் நோய்வாபய்ப்பட்டேன், என் பிள்ளைங்க யாருமே என்னை கண்டுக்கல ஹாஸ்பிடல் செலவுக்கு கூட பணமில்லாம கஷ்டப்பட்டேன், என் நிலமையை நெனச்சு கவலைப்பட்ட என் மனைவி எதிர்ப்பாராத விதமா மௌத் ஆயிட்டா அவளுடைய இருதி சடங்கைக் கூட என்னால சரியாக செய்யமுடியவில்லை. கையில காசு இல்லாதனால பிரைவேட் ஹாஸ்பிடலிருந்து கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு மாறினேன், யாருமே வந்து பார்க்கவில்லை அனாதையின்னு வெளியிலே துரத்திட்டாங்க. அழுது புலம்பி அல்லாஹ்வை பிராத்திக்கிறதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை, நோயாளியா ஒரு பிச்சைக்கரனைப் போல இந்த வீதியில சுத்தி வந்தேன்.
அந்த ஆண்டவனுக்கு என் வேதனை புரிந்ததோ எண்ணமோ புரியல என் மனைவி மேல நான் எப்பவோ கட்டியிருந்த இன்சுரன்ஸ் பணம் என்னைத்தேடி வந்தது, என் உறவுகளும் தான் பணத்துக்காக என்னை தேடி வந்த என் உறவுகளை ஏத்துக்க எனக்கு மனம் இல்லை உன்மையான பாசம்னா என்னன்னு புரியாத அவங்களை நான் புறக்கணிச்சேன் என் மனசுலயும் சிந்தனைகளிலிருந்தும் அவர்களை வெளியேத்தினேன்.

என்னைப்போல் எத்தனையோ பேர் தன் சொந்த உறவுகளாலும் பிள்ளைகளாலும் அனாதையாக்கப்பட்டு வீதியில் தள்ளப்படும் இழினிலையை சிந்திச்சேன் அப்படி பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் சொந்தங்களாக பாவிச்சேன், அவங்களை எல்லாம் என் சொந்தங்களாக  சுமக்க நினைச்சேன் அவர்களுக்காக வாழ நினைச்சேன் என்னுடைய இந்த மூன்று வருடகால முயற்சியில, பேசிக்கொண்டிருந்த காதர் பாய் பேச்சை நிறுத்தினார், ஆட்டோ டிரைவருக்கு வழி சொன்னார் ஆட்டோ ஒரு வளைவில் வளைந்து நின்றது.

குமரய்யா காதர்பாயை ஆச்சரியமாக பார்த்தார், வாங்க பெரியவரே! ஆட்டோவிலிருந்து இறங்கினார் காதர் பாய், குமரய்யாவும் காதர் பாயை பின் தொடர்ந்தார்
அங்கே ஒரு பெரிய கட்டிடம் மின் விளக்குகளால் சோடிக்கப்பட்டு இருந்தது ஒரு அலங்கார மேடை அமைக்கப்பட்டு இருந்தது அங்கு நிறைய பேர் இருந்த்தார்கள் அவர்கள் பெரும்பாலும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்ப்பட்டவர்களாக இருந்தார்கள் அவரவர்கள் தன் தன் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள் காதர் பாய் அவர்களை நோக்கி போனார், குமரய்யா ஒன்றும் புரியாமல் நின்றுக்கொண்டிருந்தார்.

காதர் பாய் அங்கிருந்த ஒருவரிடம் குமரய்யாவைக் காட்டி ஏதோ சொன்னார், அந்த நபர் குமரய்யாவை நோக்கி வந்தார் வந்து குமரய்யாவை அழைத்தார் வாங்க பெரியவரே,

எங்கே என்றார் குமரய்யா புரியாமல், தூரத்திலிருந்து காதர் பாய் அவரோடு போகும்படி குமரய்யாவிடம் சைகையினால் சொன்னார், குமரய்யா அவரை தொடர்ந்தார்
அந்த நபர் குமரய்யாவை ஒரு சின்ன ஹாலுக்குள் கூட்டிச் சென்றார் அங்கு சில பார்சல்கள் வைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்றை எடுத்து குமரய்யவிடம் கொடுத்தார்
அதில் புதிய வேட்டிச்சட்டை இருந்தது குமரய்யா புரியாமல் பார்த்தார்

பெரியவரே அங்கே பாத்ரும் இருக்கிறது அங்கே போய் குளித்துவிட்டு இந்த ஆடையை மாற்றிக்கொண்டு வாருங்கள் என்றார் அந்த நபர், குமரய்யாவிற்க்கு புரிய்வில்லை ஏன்? இங்கே என்ன நடக்கிறது? என்றார் குமரய்யா பதட்டமாக,

பதட்டப்படாதிர்கள் பெரியவரே! போய் குளித்து விட்டு வாருங்கள் உங்களுக்கு எல்லாம் புரியும் என்றார் அந்த நபர். அதன்படி குளித்துவிட்டு புதுத் துணி மாற்றிக்கொண்டு வந்தார் குமரய்யாஅவருக்காக காத்திருந்த ஒரு நபர் குமரய்யாவை உணவு உண்ணும் இடத்துக்கு அழைத்து சென்றார் அங்கு குமரய்யாவிற்க்கு வடை பாயாசத்துடன் கூடிய உணவு பரிமாரப்பட்டது, அதீத பசி குமரய்யாவை பதில் பேசவிடவில்லை உணவை உண்டு முடித்தார் அங்க்கிருந்த மற்றொருவர் குமரய்யாவை அலங்கார மீடை இருந்த இடத்துக்கு கூட்டி சென்றார்.

அங்கு ஒரு நாற்காலியில் குமரய்யாவை அமர வைத்தார் அங்கு நிறைய பேர் அமர்ந்த்து இருந்தார்கள் மேடையில் சிலர் அமர்ந்து இருந்தார்கள் எல்லோரும் பரப்பரப்பாக இருந்தார்கள் நிறைய பத்திரிக்கையாளர்கள்  எல்லாம் வந்திருந்தார்கள் மேடையில் காதர் பாய் இருப்பார் என எதிர்ப்பார்த்தார் குமரய்யா ஆனால் காதர் பாய் மேடையில் இல்லை. சிறிது நேரத்தில் ஒருவர் மேடையில் பேச வந்தார் வந்திருந்தோர் எல்லோரையும் வாழ்த்தி வரவேற்றார்.

சிறிது நேரத்தில் காதர் பாய் அங்கு வந்தார் மேடையில் பேசும் இடத்துக்கு வந்தார் வந்தோர் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு தனது பேச்சைத் தொடங்கினார்.

மனித வாழ்க்கை உறவுகளால் பின்னி பிணையப்பட்டது உறவுகளில் மாற்றம் இருக்கலாம் ஆனால் உறவுகள் இன்றி மனிதனால் வாழமுடியாது உறவுகள் தானே மனித உணர்வுகளுக்கு வடிகால், ஒருமனிதன் தன்னை உறவுகளாலும் சமுகத்தாலும் புறக்கணிக்கப்படுவானெனில் அவனுடைய வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும் அதோடு அவனிடம் பொருளாதாரமும் இல்லையெனில் அடுத்து அவனுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியப்போவதில்லை, இந்த நிலைகளை நான் உணர்ந்தவன் எனது வாழ்க்கை இங்குள்ள எல்லோருக்கும் தெரியும், மனித உறவுகளை இந்த சமுதாயம் எதனைக் கொண்டு அளவிடுகிறது அதாவது மனித உறவுகளை எதனைக் கொண்டு மனிதர்கள அளவிடுகிறார்கள் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானவன் என்பது வரை அவர்களுக்கு இடையிலான உறவு நீடிக்கிறது, அவ்வாறு பூர்த்திசெய்ய இயலாதவன் எனும்போது உறவு வெட்டுப்படுகிறது, இது ஒரு வியாபாரம் போன்றது அதாவது தேவைகளின் அடிப்படியில் தீர்மானிக்கப்படுகிறது ஒரு மனிதன் அவனை நோக்கி வரும் தேவைகளை பூர்த்தி செய்வானகில் அவன் மதிக்கப்படுகிறான், போற்றப்படுகிறான் இல்லையெனில் அவன் அவமதிக்கப்படுகிறான், தூக்கி வீசப்படுகிறான். எனவே மனிதர்கள் தன்னை நோக்கிவரும் தேவைகளை பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும் அதாவது நோக்கிவரும் தேவைகளுக்கு சரியான பதிலீடுகளை பெற்று இருக்கவேண்டும், அவைகளை சுமந்து இருக்க வேண்டும் என்னிலையிலும் சுமைத்தாங்கியாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் அவர்கள் தவிர்க்கப்படுவார்கள், அவமதிக்கப்படுவார்கள் துரத்தப்படுவார்கள் தூக்கி எறியப்படுவார்கள். அவ்வாறு உறவுகளால் இழிவுப்படுத்தப்ட்டவர்கள் தான் இங்கே கூடியிருக்கிறோம்.

பாசம் என்ற பதத்திற்க்கு வருவோம், ஒரு பெற்றோர் தனக்கு பிறந்த குழந்தையை பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கிகல்யாணம் செய்துக்கொடுத்து வேலை வாங்க்கிக்கொடுத்து தனது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையயும் தன் குழந்தைகளுக்காக செலவிட்டு அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் தனது வாழ்னாளில் பெரும்பகுதியை செலவிட்டு தன் பிள்ளைகளுக்காக நல்லன தேடித் தரும் பெற்றோர்களுக்கு, அவர்களது பிள்ளைகள் பெற்றோரிடமிருப்பது அனைத்தையும் பறித்துக்கொண்டு அவர்களிடம் இனி பறிப்பதற்க்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்த பிறகு அவர்களை முதியோர் இல்லத்திற்க்கும் நடுத்தெருவிற்க்கும் நாடு கடத்துகிறார்கள், தன் பிள்ளகள் மீது பாசம் வைத்து அவர்களுக்காக தன் வாழ்னாளை செலவிடும் பெற்றோர்களுக்கு அவர்களின் இறுதி காலத்தில் பாசம் காட்டவும் பரிவுக்காட்டவும்  பிள்ளைகளால் முடிவதில்லை இந்த நிலைதான் எல்லோர் வீட்டிலும் என நான் சொல்ல வரவில்லை ஆனால் இன்றைய சமுதாயத்தில் இத்தகைய இழினிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் இன்று வீதியில் அனாதைகளாகவும், பிச்சைக்காரர்களாகவும் அலைவதை இன்றைய வீதிகளில் நிறையவே காண முடிகிறது இன்றைய கால பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீதான பாச பரிவுகள் முற்றிலுமாக மறுத்துப் போய்விட்டது அவர்கள் பெற்றோர்களை ஒரு பணம் காய்க்கும் மரமாகவே நினைக்கிறார்கள் காய்ப்பது குறைந்துப் போனாலோ, அல்லது நின்று போனாலோ அவர்கள் வெட்டி வீதியில் தள்ளிவிடுகிறார்கள் இதுதான் இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்களின் நிலை.அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரலாகத்தான் நான் உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கிறேன்.

இந்த மலர்கள் காப்பகத்தில் 40 க்கும் மேற்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் தன் பிள்ளைகளுக்காக சொத்துக்களை எல்லாம் இழந்த்துவிட்டு அதே பிள்ளைகளாலே தெருவிற்க்கு துரத்தப்பட்டவர்கள் தான், ஏன் நானும் அத்தகைய நிலையை அனுபவித்தவன் தான், நான் அனுபவித்த கஷ்டங்கள், மோசமான அனுபவங்கள் என்னை இப்படி ஒரு காப்பகத்தை துவக்கத் தூண்டியது நான் அனுபவித்த கஷ்டங்களை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என நினைத்தேன் அது இன்று ஒரளவு நனவாகியுள்ளது.

இன்று நாங்கள் புதிய பிறவி எடுத்துள்ளோம், நாங்கள் யாரும் பொழுதை வீணே கழிப்பதில்லை, நாங்களும் உற்பத்தி செய்கிறோம் கைவினப்பொருட்கள் தயாரகின்றன எங்க்கள் கூடத்தில், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசகமாக டியுசன் எடுக்கிறோம், விளைனிலங்கள் தொடர்பாக விவசாய ஆலோசனைகள் வழங்குகிறோம், எங்கள் கூடத்தில் நூலகம் உள்ளது பொதுமக்களும் வந்து பயன்பெருகிறார்கள், மனவளக்கலை மற்றும் யோகா பயிற்சிகள் தருகிறோம் எங்கள் கூடத்தில் நல்ல அனுபவங்களை எடுத்துக்கூறும் கதைகள் கட்டுரைகள் உறுவாகின்றன, தேவையுள்ளவர்கள் பயன்பெருகிறார்கள் அன்று நாங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதி இல்லாதவர்களாக வெளியே வீசப்பட்டோம் ஆனால் இன்று பலர் எங்க்களிடம் வந்து பயன்பெகிறார்கள் அவர்கள் தேவைகளை மனனிறைவுடன் பூர்த்தி செய்துக் கொண்டு திரும்புகிறார்கள்
அன்று நாங்கள் எங்கள் பிள்ளைகளிடம் எதிர்ப்பார்த்தோம் பாசத்தையும் பரிவையும் அது எங்களுக்கு கிடைக்கவில்லை இன்று நாங்கள் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை பூத்து சிரிக்கின்றோம் பலன் எதிர்ப்பாரா மலர்களைப் போல் எங்கள் பணி சேவை செய்வதே நாங்கள் பாசத்தையும் பரிவையும் பெறுவதில் அப்பாற்ப்பட்டவர்கள் ஆனால் அதனை கொடுப்பதில் தாரளமனவர்கள் தினம் தினம் மலரும் மலர்களைப் போல் அதனால் தான் மலர்கள் காப்பகம் என் பெயர் வைத்துள்ளேன் எனப் பேசி முடித்தார் காதர் பாய். அந்த இடமே கரவொளியில் அதிர்ந்தது.

கூட்டம் முடிந்து எல்லோரும் களைந்து போனார்கள், காதர்பாய் குமரய்யாவை தேடினார் அவரை காணவில்லை சிலரிடம் விசாரித்தார் யாருக்கும் தெரியவில்லை, பின்னால் இருந்து யாறோ குரல் கொடுத்தார்கள் இவரையா தேடுறிங்க குரல் கேட்டு திரும்பினார் காதர் பாய் தூரத்தில் கைக் கட்டினார்கள் அங்கே குமரய்யா புதிதாக ஒரு செடி ஒன்றை நட்டு பாத்திக்கட்டி தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

காதர் பாய்க்கு மனதுக்குள் ஒரு சின்ன நிம்மதி, செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு திரும்பினார் குமரய்யா, அவரைப் புன்னகையுடன் பார்த்தார் காதர் பாய், குமரய்யாவும் புன்னகைத்தார் அந்தப் புன்னகையில் ஒரு புதிய தன்னம்பிக்கை தெரிந்தது.