Thursday 10 February, 2011

காதல்...




பிரவீணா! பிரவீணா! ஏய் பிரவீணா! அங்கே அப்படி என்னதாண்டி பன்னுறே, கூப்பிடறது காதிலே விழல கிச்சனிலிருந்து அபிராமி கத்தினாள், கவர்மெண்ட் கொடுத்த இலவச கலர் டி.வி யில் ரஜினியின் சிவாஜி பட பாடலை ரசித்துக்கொண்டிருந்த பிரவீணாவுக்கு அபிராமியின் கத்தல் காதில் விழவில்லை.
டி.வி யில் ஸ்ரேயா ஆம்பள் ஆம்பள் பாடலுக்கு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள் அதனை ரசித்துக்கொண்டிருந்த பிரவீணாவின் முதுகில் ஒரு அடி விழுந்தது பதறி திரும்பியவள் அபிராமியை கண்டு சினுங்கினாள், என்னம்மா!
ஏண்டி எவ்வளவு நேரமாய் கத்திக்கொண்டிருக்கிறேன் உனக்கு டி.வி கேக்குதா? அங்கே எவ்வளவு வேலை கிடக்குது.
போடி போய் அந்த சீடையை டின்னில் அடைச்சு வை, வாணலில் இருக்கும் எண்னெய்யை எடுத்து ஆறிடுச்சான்னு பார்த்து கேனில் ஊற்றி வை  என மகளை விரட்டினாள் அபிராமி,


ம்கூம் .. கொஞ்ச நேரம் டீ. வி பார்க்க விட மாட்டியே! என முனங்கியவாறு சமயலறைக்கு போனாள் பிரவீணா.
நடந்து போகும் மகளையே பார்த்தவாறு  நின்ற அபிராமிக்கு நினைவுகள் பின் நோக்கி சென்றது.


பிரவீணாவிற்க்கு இரண்டு வயது இருக்கும்  அபிராமியின் கணவன் வேறு ஒரு பெண்னுடன் ஊரை விட்டே போய்விட்டான், நிர்க்கதியாய் நின்ற அபிராமிக்கு அவள் தம்பி வாசு தான் ஆதரவாய் நின்று ஒரு ஆம்பிளையாக அவளையும் குழந்தையாய் இருந்த பிரவீணாவையும் காப்பற்றினான் அவர்களுக்காக அவன் படிப்பையும் பாதியிலேயே விட்டு விட்டு சிறு வயதிலேயே வேலைக்கு போய் இருவரையும் காப்பாற்றினான். 


மேலும் எதிர்க்காலத்தை எண்ணி அதிக வருமானமும் வேண்டி கிராமத்திலிருந்து பக்கத்து நகரமான நெய்வேலிக்கு ஒரு பழைய ஓட்டு  வீட்டில் குடி பெயர்ந்தார்கள்.
வீடு பழையதாக இருந்தாலும் கடைத்தெரு பகுதியில் இருந்தது வருமானத்திற்க்கு வழி தேடியபோது முறுக்கு, சீடை வியாபாரம் செய்யலாம் என வாசு சொன்னான் அதன்படியே சிறிய முதலுடன் தொடங்கிய வியாபாரம் இன்று நல்ல வருமானம் தரும் தொழிலாக மாறியிருந்தது. கிராமத்தில் பத்தாவது வரை முடித்திருந்த ப்ரவீணா நெய்வேலி வந்து பன்னிரண்டாவது வரை முடித்திருந்தாள்.
அபிராமி சீடை, முறுக்கு தயாரிப்பதும் வாசு அதனை கடைகளுக்கு கொண்டு போய் போடுவதுமாக வியாபாரம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. பிரவீணா பன்னிரண்டாவது முடித்ததும் காலேஜுக்கு போக விரும்பினாள் ஆனால் அபிராமி வசதியை க்காரணம் காட்டி தடுத்து விட்டாள், பிரவீணாவின் படிப்புக்கு அபிராமி தடையாக இருப்பது பிரவீணாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.


அவள் எண்ணங்கள் ஆடம்பர வாழ்க்கையை நாடியது நன்றாக படித்து நல்ல படித்தவனாக பார்த்து திருமணம் செய்துக்கொள்ள விரும்பினாள் பிரவீணா, 
பிரவீணாவை பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், நல்ல உயரம், சிவந்த நிறம், எடுப்பான, எளிதில் எவரையும் கவரும் அழகு, துறு துறுவென மேயும் மீன்களை போன்ற கண்கள், எடுப்பான மார்பகங்கள், குருகிய இடுப்பு, கருமையாக  பின்னழகோடு உறவாடும் நீண்ட கருங்கூந்தல் என பார்ப்பவரை  பெருமூச்சுவிட வைக்கும் அழகு.


அந்த அழகுதான் அபிராமி வயிற்றில் புளியை கரைத்தது, காலேஜுக்கு படிக்க போனால் ஏதாவது காதல் என மாட்டிக்கொள்வாலோ என பயந்து தொலைத்தாள் அதனாலேயே அவள் படிப்புக்கு முற்று புள்ளி வைத்துவிட்டாள், மேலும்  பிரவிணாவுக்கு வாசுவை திருமணம் செய்துவைத்துவிட வெண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தாள் அபிராமி.


தன் குடும்பத்தை சிறு வயதிலிருந்தே சுமந்துவரும் தன் தம்பி தான் பிரவிணாவுக்கு சரியான பொருத்தம்  என முடிவு செய்திருந்தாள் அபிராமி மேலும் தன் தம்பிக்கு செய்யும் நன்றிக்கடனாகவும் நினைத்தாள். 


வாசுவுக்கு பிரவீணா மீது விருப்பம் இருந்தாலும் அவள் விருப்பமே அவனுக்கு முக்கியாகப் பட்டது விரும்பிய பெண்னை மனப்பதே வாழ்க்கைக்கு சந்தோஷம் தரும் என அவன் நம்பினான், மேலும் பிரவீணாவை விட அழகிலும் உயரத்திலும் குறைவாக இருக்கும் வாசு, அவளுக்கு சரியான பொருத்தம் இல்லை என்ற எண்னமும் அவனுக்கு இருந்தது.
அதனாலேயே அபிராமி கல்யாணப்பேச்சு எடுக்கும் போதெல்லாம் அதில் விருப்பம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டான் வாசு, .இது அபிராமிக்கு சற்று ஏமாற்றம் தந்தாலும் அவள் மனம் சலைக்கவில்லை சரியான நேரம் பார்த்து க்காத்துக்கொண்டிருந்தாள்.


பிரவீணாவோ அபிராமியின் எண்ணங்களுக்கு நேர்மாறாக இருந்தாள் மாமா வாசு தன் குடும்பத்துக்காக எவ்வளவோ செய்த்திருந்தாலும் அதற்க்காக தனக்கு சற்றும் பொருத்தம் இல்லாத அவனை மணந்துக்கொள்வதில் அவளுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை மேலும் அவளின் எண்ணங்கள் படிப்பின் மீது இருந்தது நன்றாக படித்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ளவே அவள் விரும்பினாள் அவள் தொடர்ந்து படிப்பதற்க்கு வாசுவும் ஆதரவு தெரிவித்தான் ஆனால் அபிராமி உருதியாக மறுத்துவிட்டாள், தபால் மூலமாகவாவது டிகிரி படிக்கவேண்டும் எண்பதில் ஆர்வமாக இருந்தாள்.


மேலும் தான் போய் கேட்டாள் அம்மா மறுத்துவிடுவாள் எனவே வாசு மாமா மூலமாக கேட்டு எப்படியாவது சம்மதம் வாங்கிவிடவேண்டும் என தனக்குள் ஐடியா செய்தாள் பிரவீணா.
பிரவிணா இதுவரை வாசுவிடம் எதுவும் கேட்டதில்லை படிப்புக்காக இன்று அவன் உதவியை நாடி வாசலில் காத்திருந்தாள், வாசலிலேயே பேசிவிட்டாள் அபிராமிக்கு தெரியாது  வீட்டினுள் வைத்து பேசினாள் அம்மா இடையில் புகுந்து தடுத்துவிடுவாள் என்ற பயம் பிரவிணாவுக்கு,


இரவு 7 மணி ஆகியும் வாசு வரவில்லை என்றைக்கும் 6 மணிக்கு வரும் வாசு ஏன் இன்று இப்படி படுத்துகிரான் என புலம்பினாள் மனதுக்குள், எதிர்வீட்டு மாடியில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது யாரோ நடமாடிக்கொண்டிருந்தார்கள். 
பிரவிணாவின் நடவடிக்கை இன்று அபிராமிக்கு வித்தியாசமாக என்ன ஆச்சு இவளுக்கு என்றைக்கும்  ஆறு மணிக்கெல்லாம் டி.வி பார்க்க உட்க்கார்ந்து விடுபவள் மணி ஏழைத்தாண்டியும் உள்ளே வராமல் வாசலில் உட்க்கார்ந்து இருந்தாள்,
ஏய் பிரவீணா அங்கே என்ன செய்யறே என வாய் எடுத்தவள் வாசலில் வாசு வந்து நிற்பதும்  அவனோடு பிரவீணா ஏதோ ஆர்வமாய் பேசுவதையும் கண்டு மனது ஏதோ கணக்கு போட்டது மனதுக்குள் வேண்டினாள் பெருமாளே! நான் நினைச்சது மட்டும் நடந்துச்சுன்னா திருப்பதிக்கு நடந்தே வருவதாக வேண்டினாள்.
என்றைக்கும் இல்லாமல் இந்த நேரத்தில் பிரவிணா வாசலில் நிற்பதும் தன்னோடு பேசத்தான் காத்து நிற்கிறாள் என்றதும் ஆர்வமானான் வாசு.


என்ன பிரவிணா இந்த நேரத்தில வாசல்ல நிக்குறே! என்றான் வாசு
மாமா அது வந்து, உங்களால எனக்கு ஒரு உதவி ஆகனும் செய்வீங்களா! என கெஞ்சுவது போல் பிரவிணா கேட்க்கவும் தடுமாறி போனான், தன்னோடு பேசவே யோசிக்கும் தன் அக்கா மகள் இன்று தன்னிடம் வாசலில் நின்று உதவி கேட்கிறாள் என்றதும் அது எதுவாயினும் செய்துவிடுவது என முடிவு செய்தான்,
சொல்லு பிரவீணா என்ன செய்யனும், ஆர்வமானான் வாசு,


அம்மா காலேஜ் போய் படிக்க வேண்டாமுன்னு சொல்லிட்டா, அதனால கரஸ்ல அதாவது லட்டர் மூலமா  பி. காம் படிக்கலாம்னு, ஆசையாயிருக்கு அப்ளிகேஷன் போட இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு நீங்க எனக்காக அம்மாகிட்ட பேசினீங்கன்னா கண்டிப்பா அம்மா ஒத்துப்பா! ப்ளீஸ் மாமா கெஞ்சினாள் பிரவிணா,
கரஸ்லதானே பிரவீணா படிக்க போறே! கவலைபடாதே அம்மாகிட்டே நான் பேசறேன் கண்டிப்பா ஒத்துப்பா, அப்புறம் நானே நாளைக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வரேன் உடனே அப்ளை பண்ணிடலாம் சரியா என்றான்.
மலை போன்ற கஷ்டத்தை இவ்வளவு எளிமையாக வாசு திர்த்துவைப்பான் என பிரவிணா எண்ணவில்லை மனம் சந்தோஷத்தில் தடுமாறியது அம்மா ஒத்துப்பாளா மாமா என தயக்கத்துடன் கேட்டாள் பிரவீணா.


கவலைப்படாதே அதை நான் பார்த்துக்கிறேன் என்றான் வாசு.
என்றும் இல்லாமல் இன்று தன் தம்பியும், தன் மகளும் ஒன்றாய் பேசியபடி வருவதைப் பார்த்த அபிராமி மனதுக்குள் சந்தோஷப்பட்டாளும் அவர்கள் பேசிய விஷயம் என்ன என அறிவதில் ஆர்வமானாள்.
உள்ளே வந்த வாசு அக்கா பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்றவாறு பாத்ரூமை நோக்கி போனான்,


என்ன வாசு இன்னிக்கு இவ்வளவு லேட்டு என்றாள் அபிராமி, வார வசூலுக்கு போனேன் அங்கே லேட்டாயிடுச்சு, அபிராமி சமயலறயிருந்து  சாப்பாடு கொண்டு வரும் முன், பாய் விரித்து தண்ணீர் வைத்து சாப்பிடும் இடத்தை தயார் செய்து இருந்தாள்  பிரவீணா இது புதிதாக இருந்தாலும் அபிராமி காட்டிக்கொள்ளவில்லை. 
வாசு சாப்பிட அமர்ந்தான், பிரவீணா தன் ரூமிற்க்குள் போய் ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது போல் அவர்கள் பேசுவதை கவனிக்க ஏதுவாக அமர்ந்து கொண்டாள்.
அக்கா நான் உன்கிட்டே ஒன்னு சொல்லனும், பிரவிணா தபால் மூலமாக மேற்க்கொண்டு படிக்க ஆசைபடுறா உன்கிட்டே நேரடியா கேட்க அவளுக்கு பயம், நம்ம குடும்பத்துலேயும் ஒரு டிகிரி படிச்சவா இருந்தா நமக்கும் நல்லது தானே,  காலேஜுக்கு போக வேண்டியதில்லை வீட்டிலிருந்தே படிக்கலாம் என்னக்கா சொல்லுறே! நேரடியாக விஷயத்துக்கு வந்தான் வாசு,


அடடே! இப்ப அவங்களுக்கு சிபாரிசுக்கு ஒரு ஆள் கேக்குதா என்ன என்றாள் அபிராமி நக்கலாக, 
இல்லக்கா, பிரவீணா ஆசைப்படுறா படிச்சுட்டு போகட்டுமே என இழுத்தான் வாசு,
அப்புறமென்ன ரெண்டு பேரும் வெளியில் நின்று  பேசி முடிவு செய்துவிட்டு இப்ப என்னை கேட்கிறிங்க, என பொய் கேபம் காட்டினாள் அபிராமி,
அக்கா அது வந்து எனக்காக விட்டு கொடுக்கா எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கேறேன். அவ ஆசைப்படி ஒரு பட்டதாரியா ஆகட்டுமே.
எனக்கென்ன வாசு எனக்கப்புறம் அவளுக்கு எல்லாமே நீதான், நீ ப்பார்த்து செஞ்சா சரி என்றாள் அபிராமி விட்டேத்தியாக, மேலும் அவள் மனதில் உள்ளதையும் வாசுவுக்கு இன்னொரு முறை உறுதி படுத்திவிட்ட சந்தோஷம் அவளுக்கு
அவர்கள் பேசுவதை காதி வங்கிய பிரவீணாவுக்கு அபிராமியின் பேச்சுக்கள் எரிச்சல் உண்டாக்கினாலும் தற்போது எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என் நினைத்தாள்.
இல்லக்கா உன் சம்மதத்துடன் அவளை படிக்க அனுமதிச்சா போதும் இல்லேன்னா வேண்டாம் என்றான் வாசு, 


இதற்க்கு மேல் பிடிவாதம் பிடிப்பதில் அர்த்தம் இல்லை என புரிந்தது அபிராமிக்கு, மேலும் தம்பியின் ஆசையையும் நிறைவேறட்டுமே, என உணர்ந்தவள் சரி வாசு உன் விருப்பமே என் விருப்பம் என் விருப்பம் நீ பிரவிணாவை பற்றி இந்த அளவுக்கு அக்கறை எடுப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் உன் இஷ்டப்படியே எல்லாம் நல்லப்படியாக நடக்கட்டும்  என முடித்தவள், 


பிரவிணா என குரல் கொடுத்தாள் வாசுக்கு கேசரி எடுத்து வைக்க மறந்துவிட்டேன்  கிச்சன்ல இருக்கு எடுத்து வா என்றாள்!
பிரவிணா ஒன்றுமே தெரியாதவள் போல் கேசரியை கொண்டுவந்து வைத்தாள்
என்ன பிரவினா கீழே வைக்கிறே மாமனுக்கு கேசரியை தட்டில் போடு என்றாள் அபிராமி
பிரவினா வாசுவின் தட்டில் கேசரி எடுத்து வைத்தாள் போதும் பிரவிணா என்றான் வாசு.
இரு வாசு இன்னும் வைக்கவே இல்ல, நீ வை பிரவிணா என்றாள் அபிராமி,
பிரவிணாவுக்கு வாசுவை இவ்வாறு உபசரிப்பது புதிதாக இருந்தாலும் வேறு வழியின்றி இன்னொரு முறை கேசரியை எடுத்து வைத்து விட்டு உள்ளே போய் விட்டாள் யாரிடமும் எதுவும் பேசவில்லை.
நான் அப்படி எதுவும் பேசாமல் வந்து இருக்க கூடாது, ஒரு வேளை மாமா எதுவும் தப்பாக நினைக்கலாம், மனதுக்குள் வருத்தப்பட்டாள்,  பிரவினா.
வாசு சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் ரூமிற்க்கு போனான் அதற்க்கு முன் அபிராமியிடம் அக்கா பிரவிணாவின் பன்னிரன்டாவது பாஸ் பன்னின சர்டிபிகேட்டை எடுத்து வை தேவைப்படும் என்றான்.


சரி வாசு என்றாள் அபிராமி.


பிரவிணா, பிரவிணாவை கூப்பிட்டான் வாசு,
என்ன மாமா என்றாள் பிரவினா, நான் நாளைக்கு அப்பிளிகேஷன் வாங்கி வந்துடறேன் நாளை மறுநாள் அப்பிளிகேஷன் போட்டுடலாம்  நாள்  நல்லா இருக்கு என்றான் வாசு.


அம்மா உனக்கு இஷ்டமாம்மா என்றாள் பிரவிணா அபிராமியை  பார்த்து, எனக்கும் இஷ்டம்தான் பிரவிணா நல்லபடியா படிச்சு பட்டம் வாங்கு வாசு சொன்னது போல் நம் குடும்பத்திலும் ஒரு பட்டதாரி வரட்டுமே என்றாள் அபிராமி இருவரையும் பார்த்து புன் முறுவலுடன்,  


பிரவிணாவின் மனது குதுகலப்பட்டது, அப்பாடா ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது மனதுக்குள் சந்தோஷப்பட்டாள் பிரவிணா, ஆனாலு இடை இடையே அபிராமி உள் அர்த்தத்துடன் பேசியது மனசுக்கு சங்கடத்தை உண்டாக்கியது என்ன அம்மா இவள் எதிலும் என் விருப்பம் முக்கியமில்லையா? என மனதுக்குள் புலம்பியவாறு தூங்கிபோனாள்.
வாசுவுக்கு அபிராமி சொன்னது சந்தோஷமாக இருந்தாலும் பிரவிணாவை போலவே வருத்தப்பட்டான், அபிராமி உள் அர்த்தத்துடன் பேசியதை எண்ணி, அதுவும் பிரவிணா காதில் விழுவது போல் பேசிவிட்டாள் அக்கா மனதுக்குள் வருத்தப்பட்டான், பிரவிணாவுக்கு புரிந்திருக்குமோ? என யோசித்தவாறு தூங்கிபோனான்.


பக்கத்து தெரு விநாயகர் கோயிலின் பஜனை பாடல்கள் அந்த அதி காலை நேரத்தில் மனதிற்க்கு இதமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
பிரவிணா அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தலையில் ஈர டவலுடன் வாசலில் கோளம்போடத் தொடங்கினாள், கோளம் போடுவது அவளுக்கு பிடித்த விஷயம்  கோளமாவு பொடியுடன் அரிசி மாவும் கலந்து கோளம் போடுவாள் எறும்பு முதலான சிறு உயிர்களுக்கு அது இரையாவதில் அவளுக்கு சிறு மகிழ்ச்சி.
பச்சைக் கலர் பாவடையில் தங்க நிற ஜரிகையில் ஓரம் வைத்து, அதற்க்கு மேட்ச்சாக பச்சைக் கலர் ஜாக்கெட்டும்,
வெள்ளை நிற தாவணியில் ஊதா பூக்கள் போட்டதுமாய் அவளை ஒரு தேவதையாக காட்சியளித்தது, பிரவிணா, அந்த அதிகாலை பொழுதில் கோளம் போடும் அழகை ரசிப்பதற்க்காகவே அந்த பிரம்மன் அவளை படைத்தானோ என் எண்ணத்தோன்றும் ரம்மிய காட்சியாக இருந்தது அவள் கோளம் போடும் அழகு


என்னா பிரவிணா சௌவுக்கியாமா என் குரல் கேட்டு நிமிர்ந்தாள் பிரவிணா,
எதிர் வீட்டு கோமளம் மாமி வாசலில் நின்று இருந்தாள்  புன்னகையோடு,
என்ன மாமி சவுக்கியமா! எப்போ ஊரிலிருந்து வந்தேள் என்றாள் பிரவிணா
ராத்தி தாண்டி ஊரிலிருந்து வந்தேன், நேத்தெல்லாம் பஸ்ல வந்தது உடம்பெல்லாம் ஒரே வலி செத்த என் வீட்டு வாசலிலும் கோளம் போடேண்டி என்றாள் கோமளம் மாமி, 


அதற்க்கென்ன மாமி இதோ வரேன்,  மாமி வீட்டு வசலுக்கு போய் கோளம் போடத்துவங்கினாள் பிரவிணா
உனக்கு என்ன கலை ஆர்வம்டி பிரவிணா என்ன ரம்மியமாய் கோளம் போடற.
ஐஸ் வைக்காதிங்கோ மாமி நான் தான் கோளம் போடறேனே! இல்லடி பிரவிணா நீ கோளம் போடற அழகை பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு என்றாள் கோமளம் மாமி.
கோளம் போடுவதில் ஆர்வமானாள் பிரவிணா, மாமி வீட்டு வாசலில் கோளம் போட்டு முடித்துவிட்டு மீண்டும் அவள் வீட்டுவாசலில் பாதியில் விட்ட கோளத்தை போடத்துவங்கினாள் பிரவிணா.


மாமி அடுக்களையில் வேலை இருக்குன்னு உள்ளே போய்விட்டாள்.
நன்றாக மலர்ந்த செம்பருத்தி பூ, அதனுடன் இருமொட்டுக்கள், இலைகளுடன் கூடிய கோளத்தை போட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு உணர்வு தன்னை யாரோ உற்றுனோக்குவது போல்
சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள் யாரும் இல்லை மீண்டும் கோளம் போடத்துவங்கினாள் மீண்டும் அதே உணர்வு யாரோ உற்றுனோக்குவது போல் சட்டென திரும்பாமல் சிறிது நிதானித்தாள் பிறகு சட்டென தலையை நிமித்தி மேலே பார்த்தாள் கோமளம் மாமி வீட்டு மாடியில் யாரோ ஓடி மறைவது போல் தெரிந்தது அதிகாலை பொழுதானதால் உருவம் சரியாக தெரியவில்லை ஆணாக இருக்க கூடுமோ அனுமானிக்க முயன்றாள் புலப்படவில்லை.


பிரவிணா! இன்னும் வாசலிலே என்ன பண்னுறே! அபிராமியின் குரல் விட்டுக்குள்ளேயிருந்து கேட்டது, இதோ வந்துட்டேன்மா கோளத்தை முடித்து விட்டு உள்ளே ஓடினாள் பிரவிணா.


அபிராமியுடன் அன்றைய வேலைகளில் ஈடுபட்ட பிரவிணா  காலையில் கோளம் போடும்பொழுது நடந்த சம்பவத்தை முழுவதுமாக மறந்து போனாள், வழக்கமாக தயாரிக்கும் சீடை, முறுக்கு போன்றவைகள் அன்று சற்று அதிகமாக தயாரிக்க வேண்டி இருந்ததால் வேலை அதிகமாக இருந்தது.
பிரவிணாவின் காலெஜ் அப்ளிகேஷன் வாங்கவும்  தனது அன்றாட வேலை தொடர்பாகவும் போன  வாசு மதியம் சாப்பாட்டுக்கு கூட வரவில்லை, மதிய வேலைகளை முடித்து விட்டு அபிராமி தூங்க போய்விட்டாள்.


பிரவிணா கையில் ஒரு புத்தகத்துடன் வீட்டு ஹாலில் உட்க்கார்ந்து படிக்க தொடங்கினாள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவின் கவிதைகளையும் சில கதை புத்தகங்களையும் படிப்பது பிரவிணாவின் வழக்கம் படித்ததில் சில முக்கியமான கருத்துக்களையும் கவிதைகளையும் தனியாக குறிப்பெடுத்து வைப்பாள் அவ்வாறு அவள் படித்ததில் அவளை  க்கவர்ந்த வைரமுத்துவின் வரிகள் சில:
கொடியிலிருந்து மலர்கள் உதிர்கின்றன, மலர்கள் உதிர்ந்தது கொடிக்கு தெரியுமா தெரியாதா? அப்படி தெரிந்தால் கொடி மலரை உதிர விட்டிருக்குமா என்ற சந்தெகம் கவிஞனுக்கு,
சந்தேகத்துடன் வீதியில் உலா வருகிறான், அப்பொழுது ஒரு மனிதன் ஒரு குழந்தையை தூக்கியப்படி செல்கிறான் குழந்தை தூங்கியபடி செல்கிறது அதன் கையில் இருக்கும் பொம்மை நழுவி விழுகிறது அதனை கவனிக்கிறான் கவிஞன், கொடிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மலர்கள் உதிர்ந்து விழுகின்றது என்ற முடிவுக்கு வருகின்றான் கவிஞன், இதில் வைரமுத்துவின் கருத்து என்னவென்றால் '' நான் யார் நழுவவிடும் குழந்தையா இல்லை நழுவி விழும் பொம்மையா! இது போன்ற கருத்துக்களையும் கவிதைகளையும் படிப்பதில் பிரவிணாவுக்கு ஆர்வம் அதிகம்.
கவிதையில் ஆழ்ந்து போயிருந்த பிரவிணாவுக்கு வாசலில் யாரோ வருவது போன்ற சப்தத்தில் கலைந்தாள், வாசுதான் உள்ளே வந்தான்  என்ன பிரவிணா சாப்பிட்டாச்சா என விசாரித்தப்படி அவன் ரூமிர்க்கு போனான்


ஆங் .. ஆச்சு மாமா என்றபடி அபிராமியை போய் எழுப்பினாள் பிரவிணா அம்மா மாமா வந்தாச்சு உனக்கும் சேர்த்து சாப்பாடு வைக்கவா! 
 இல்ல பிரவிணா எனக்கு சாப்பாடு வேண்டாம், நேரமாயிடுச்சல்ல, மாமாவுக்கு நீயே சாப்பாடு போட்டுக் கொடு
என்றபடி மறுபடியும் தூங்கதொடங்கினாள் அபிராமி.
பிரவிணா வாசுவுக்கு சாப்பாடு வைக்க சாப்பிடும் இடத்தை தயார் செய்தாள்
என்ன செய்யற பிரவிணா   என்றபடி பாத்ருமிலிருந்து வந்தான் வாசு.   
உங்களுக்கு சாப்பாடு வைக்க தயார் செய்யறேன் மாமா என்றாள் பிரவிணா வேண்டாம் பிரவிணா நேரமானதால நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்துட்டேன், நி போய் உன் வேலையை பாரும்மா என்றான் வாசு


சரி மாமா சூடா காபி எதாவது தரட்டுமா என்றாள் பிரவிணா


இப்ப வேண்டாம் பிரவிணா கொஞ்சம் நேரம் போகட்டும், ஆமா அக்கா எங்கே என்றான் வாசு, அம்மா தூங்குறா! எழுப்பட்டுமா மாமா என்றாள் பிரவிணா 
வேண்டாம் தூங்கட்டும் அப்புறமா பேசிக்கிறேன்


என்றபடி வாசு அவன் ரூமிற்க்கு போனான், பிரவிணா மாமா என இடை மறித்தாள்.
என்ன பிரவிணா என திரும்பினான் வாசு அப்ளிகேஷன் வாங்கிட்டுவந்தீங்களா! மாமா என்றாள் பிரவிணா
 அது வந்து பிரவிணா இன்னிக்கு அப்ளிகேஷன் வாங்க முடியல ஏன்னா நேத்தோட அப்ளிகேஷன் இஸ்யு பண்ணுற தேதி முடிஞ்சுட்டுன்னு  அந்த காலேஜ்ல சொல்லிட்டா அதனால எனக்கு தெரிஞ்சவா மூலமா கேட்டிருக்கேன் நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன் பிரவிணா என்றான்.


அவன் முகத்தில் சங்கடம் தெரிந்தது மேலும் அதில் ஏமாற்றமும் பிரதிபலித்தது,
பிரவிணாவுக்கு அவன் சொன்னது ஏமாற்றம் அளித்தாலும்  அவளுக்கு கண்டிப்பாக அப்ளிகேஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கை   இருந்தது, இருப்பினும் தனது நம்பிக்கையை உறுதி படுத்த  நளைக்கு கண்டிப்பாக கிடைச்சுடுமா மாமா என்றாள்,
கண்டிப்பாக கிடைக்கும் பிரவிணா என்றான் வாசு
பிரவிணாவுக்கு மனதில் கவலை தொற்றிக்கொண்டது நாளை அப்ளிகேஷன் கிடைக்கவேண்டுமே பெருமாளே கண் மூடி வேண்டினாள்.  


பக்கத்து தெரு விநாயகர் கோயிலில் இன்று வழக்கத்துக்கு மாறாக பஜனை பாடல்கள் நல்ல சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில் தெய்வபக்தியான பாடல்கள் நல்ல மனனிலையை தருவதாக இருந்தது பிரவினாவுக்கு, அந்த காலை வேளையில் பஜனை பாடல்களை கேட்டுக்கொண்டே கோளம் போடுவதில் அலாதி பிரியம் பிரவிணாவுக்கு.


வழக்கம்போல் கோளம் போட  வாசலுக்கு வந்தாள்  பிரவிணா தண்ணீர் தெளித்து கோளம் போட அமர்ந்தவள் தன் முன்னே ஏதோ கவர் போலவும் அதன் மேல் சிவப்பாக ஏதோ இருப்பதைக் கண்டு ஒரு நொடி நிதானித்தாள் ஒரு காகித கவரும் அதன் மீது ஒரு ரோஜாவும் வைக்கப்பட்டு இருந்தது.


 அதனை கையில் எடுத்தாள் அன்று மலர்ந்தது போல் ப்ரெஷ்ஷாக இருந்தது அந்த ரோஜா, அதனோடு சேர்ந்த அந்த கவரை ப்பார்த்தாள் அதில் அழகான எழுத்துக்களில் '' என் முற்றத்து நிலவுக்கு '' உன் ரசிகனின் அன்பு பரிசு என எழுதப்பட்டிருந்தது
ஒரு கணம் தடுமாறியவள், சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை, சட்டென நேற்றுக் காலை நடந்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது, நேர்றுக்காலை கோளம் போடும் பொழுது யாரோ உற்று பார்ப்பது போல் இருந்ததும் கோமளம் மாமி விட்டு மாடியில் யாரோ மறைந்ததும் பளிச்சென கண் முன் தோன்றியது.


சட்டென தலையை நிமிர்த்தி கோமளம் மாமி வீட்டு மாடியை பார்த்தாள் அங்கு யாரும் இல்லை மாடியில் விளக்கில்லாமல் இருட்டாக இருந்தது. மீண்டும் அந்த கவரையே பார்த்தாள் அழகான எழுத்துக்களில் மீண்டும் அந்த வரிகள் மீண்டும் அவளிடம் தடுமாற்றம்.


கவரின் உள்ளே ஏதோ இருப்பது போல் தோன்றியது, கவரினை பிரித்து உள்ளே பார்த்தாள் அதில் சில பேப்பர்கள் மடித்து வைக்கப்பட்டு இருந்தது அந்த பேப்பரை பிரித்தாள் அவள் அழகிய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அந்த பேப்பர் பி.காம் தபால் மூலம் படிப்பதற்க்கான அப்ளிகேஷன் இருந்தது அத்துடன் ஒரு கடிதமும் வைக்கப்பட்டிருந்தது அந்த கடிதத்தை விரல் நடுங்க பிரித்தாள்,


பிரவிணா இன்னும் அங்கே என்ன செய்யறே அபிராமி உள்ளேயிருந்து கத்தினாள் அவசரத்தில் உள்ளே ஓடினாள் பிரவிணா கையில் இருந்த கவரையும் ரோஜாவையும் ஹாலில் வைத்துவிட்டு அபிராமியை நோக்கி போனாள், போவதற்க்கு முன் சட்டென உரைத்தது கவரையும் ரோஜாவையும் யாராவது பார்த்துவிட்டால் மீண்டும் அதனை எடுத்து அவள் படுக்கை அறையில் கொண்டு போய் மறைத்து வைத்தாள்,
ஹாலுக்கு வந்து இதோ வந்துட்டேன்மா என்றபடி சமையல்  அறைக்கு போனாள்,
ஏண்டி பிரவிணா நான் ஒருத்தி இங்கே தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் நீ அங்கே என்ன செய்யறே என்றாள்,


இல்லம்மா கோளம் போடலாமுன்னு போனேன், என இழுத்தாள் பிரவிணா
இன்னும் கோளம் போடலியா இவ்வளவு நேரம் அங்கே என்ன செய்துகிட்டு இருந்தே! 
சிடுசிடுத்தாள்  அபிராமி


இல்லம்மா அது வந்து தடுமாறினாள் பிரவிணா,


சரி சரி மச மச வென நிக்காதே இந்த வென்னீரை கொண்டு போய் பாத்ரூமில் வை  நான் குளிச்சிட்டு வந்துடறேன், என்றாள் அபிராமி.
வென்னீரை பாத்ரூமிற்க்கு கொண்டு போனாள் பிரவிணா அபிராமி குளிக்கப் போனாள். 
வாசலுக்கு போய் வேகமாக பெயருக்கு ஒரு கோளத்தை போடு முடித்தாள் பிரவிணா எண்ணங்கள் அந்த கவரின் மீதே இருந்தது, வேகமாக உள்ளே வந்து தன் அறைக்கு போய் கதவை சாத்தினாள்
அந்த கவரை எடுத்தாள் அதன் உள்ளே இருந்த லட்டரை எடுத்து பிரித்தாள்
கவரின் மேலே உள்ளது போல் ஆழகான வரிகளாக மிக நீண்ட கவிதையாக இருந்தது கை நடுங்கியது பிரவிணாவுக்கு ரூம் கதவை திறந்து அபிராமி பாத்ரூமில் இருப்பதை இன்னொரு முறை உறுதி படுத்திக்கொண்டாள்.


மீண்டும் கதவை சாத்திவிட்டு கவிதை வரிகளின் மேல் தன் பார்வையை பதித்தாள் படிப்பதற்க்குமுன் உள்ளுணர்வு எச்சரித்தது இது அடுத்தவருக்கான லட்டராக இருந்தால் படிப்பது தவறல்லவா, யோசித்தாள்! லட்டரோடு இருந்த பி.காம் அப்ளிகேஷன் இது அடுத்தவருக்கான லட்டர் இல்லை என உறுதி செய்த்தது.


மீண்டும் கவிதை வரிகளை படிக்கத் தொடங்கினாள்:


இது வரை கண்டதில்லை எங்கும்
வண்ண மலர் ஒன்று மலர் 
வரைந்த அற்புதம்!


உன் விட்டு வாசலில் பூத்த
செம்பருத்தி பூ என் இதயத் 
தோட்டத்திலும்  மலர்ந்ததோ!
காதல் பூவாக!


அதிகாலை சூரியனும் ஒரு
நிமிடம் ஸ்தம்பித்து தான்
போனது உன் கலையழகை
கண்டு விட்டு!


மலருக்கு உருவம் தந்த மலரே
என் இதய தோட்டத்தில் பதியம் 
போட்ட உன் உருவத்திற்க்கு 
காதல் தோட்ட மலராக
உருவம் தருவாயோ!


மலரட்டும் உன் வாசலில் மலர்கள்
மாலையிலும், காலையில் உனைக்
கண்டு கண் விழிக்கும் சூரியன்
மாலையிலும் கண்ணுறங்கட்டும் உன் 
காதல் நினைவுகளோடு!


மாலையிலும் நீ மலர காத்திருக்கும் உன் ரசிகன்!...


குறிப்பு: வீட்டு மலரே! நீ கல்லூரி தோட்டத்திலும் மலரவே இத்துடன் இணைத்துள்ள பி.காம் அப்ளிகேஷன் பயன்படுத்திக்கொள்வாய் என்பதே இந்த ரசிகனின் விருப்பம்.


என முடிந்தது அந்த லட்டர்.
காதல்... தொடரும்.

1 comment: